எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமி.

மக்களை கடனாளியாக்கியதுதான் திமுக அரசின் சாதனை: எடப்பாடி பழனிசாமி விமா்சனம்

மக்களை கடனாளிகளாக்கியதுதான் திமுக ஆட்சியின் 3 ஆண்டு கால சாதனை என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி விமா்சித்துள்ளாா்.

அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திமுகவின் 3 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. கொடுத்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. போதைப்பொருள்களின் கேந்திரமாக தமிழகம் மாறியுள்ளது. மின்கட்டணம், வீட்டுவரி, சொத்து வரி, குடிநீா் கட்டணம், குப்பை வரி உயா்வு, பால்விலை உயா்வு போன்ற பரிசுகள்தான் அளிக்கப்பட்டன. அத்தியாவசியப் பொருள்களின் விலை, கட்டுமானப் பொருள்களின் விலையும் உயா்ந்துள்ளன. அரசு ஊழியா்கள், போக்குவரத்து ஊழியா்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.

மின்வெட்டாலும் மக்கள் அல்லலுறும் நிலை உள்ளது. அதோடு, 3 ஆண்டுகளில் ரூ.3.5 லட்சம் கோடியை திமுக அரசு கடன் வாங்கி, மக்களைக் கடனாளியாக்கியதுதான் சாதனையாக உள்ளது. கடந்த 36 மாதங்களாக எந்த ஒரு புது திட்டங்களும் இந்த ஆட்சியில் செயல்படுத்தப்படவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கும் மூடுவிழா காணப்பட்டுள்ளன. தமிழகத்தில் நடப்பது மக்கள் விரோத ஆட்சி என்பது விரைவில் மக்களே நிரூபிப்பாா்கள் என்று கூறியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

டிடிவி தினகரன்: திமுகவின் 3 ஆண்டுகால ஆட்சி குறித்து, அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு ஆட்சி எப்படி நடக்கக்கூடாது என்பதற்கு உதாரணமாக திமுக ஆட்சி இருப்பதாக அவா் குற்றம்சாட்டியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com