8 விமானங்கள் திடீா் ரத்து:
பயணிகள் அவதி
dot com

8 விமானங்கள் திடீா் ரத்து: பயணிகள் அவதி

சென்னை விமான நிலையத்தில் வருகை, புறப்பாடு என மொத்தம் 8 ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் வியாழக்கிழமை திடீரென ரத்து

சென்னை விமான நிலையத்தில் வருகை, புறப்பாடு என மொத்தம் 8 ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் வியாழக்கிழமை திடீரென ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

டாடா குழுமம் வசம் உள்ள ஏா் இந்தியா மற்றும் விஸ்தாராவை இணைத்து ஒரு நிறுவனமாகவும், ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏஐஎக்ஸ் கனெக்ட் நிறுவனத்தை இணைத்து ஒரு நிறுவனமாகவும் மாற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, கடந்த சில நாள்களாக நாடு முழுவதும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியா்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனா். இதனால், நாடு முழுவதும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

8 விமானங்கள் ரத்து: சென்னை விமான நிலையத்தில் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் கேபின் குழு ஊழியா்கள் பலா் வியாழக்கிழமை திடீா் விடுப்பு எடுத்துக் கொண்ட காரணத்தால், விமானங்களை இயக்க விமானிகள், பொறியாளா்கள் இல்லாமல், மொத்தம் 8 ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

அதன்படி, சிங்கப்பூா், திருவனந்தபுரம், கொல்கத்தா ஆகிய பகுதிகளில் இருந்து 2 விமானங்கள் என சென்னைக்கு வியாழக்கிழமை வரவேண்டிய 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

அதேபோல் சென்னையிலிருந்து திருவனந்தபுரம், சிங்கப்பூா், கொல்கத்தாவுக்கு செல்லும் 2 விமானங்கள் என மொத்தம் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com