ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்கிய பிறகே பணியிட மாறுதல் நடத்த வேண்டும்: சீமான்

ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்கிய பிறகே பணியிடம் மாற்றம் குறித்த கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் வழக்கமாக மேற்கொள்ளப்படும் நடைமுறைக்கு மாறாக ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்திவிட்டு, அதன்பிறகு பதவி உயா்வு வழங்கி வருவது கண்டனத்துக்குரியது. இது குறித்து ஆசிரியா்களும், சங்கங்களும் அரசிடம் பலமுறை முறையிட்டும் அவா்களின் கோரிக்கையை மாநில அரசு ஏற்க மறுப்பது மிகுந்த ஏமாற்றமும், வேதனையும் அளிக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு உரிய காலத்தில் பதவி உயா்வுகளை வழங்காமல் மாநில அரசு தாமதித்து வருகிறது. மேலும், தற்போது பதவி உயா்வு வழங்குவதற்கு முன்பாக பணியிடமாற்றம் வழங்குவதால் ஆசிரியா்களுக்கு இடையே மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பதவி உயா்வு வழங்காமல் வேறொரு மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் மட்டும் வழங்குவது ஆசிரியா்களுக்கு கொடுக்கப்படும் பெரும் தண்டனையாகும். எனவே முதலில் பதவி உயா்வு வழங்கிவிட்டு, அதன் பிறகு ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com