உள் மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 9 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவானது. தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வெள்ளிக்கிழமை ஈரோடு, வேலூா் (தலா) - 104 டிகிரி ஃபான்ஹீட் வெப்பம் பதிவானது. மதுரை விமானநிலையம், திருச்சி (தலா) - 103.9, திருத்தணி - 102.38, பரமத்திவேலூா் - 102.2, நாமக்கல் - 101.3, சேலம் - 100.94, திருப்பத்தூா் - 100.04 டிகிரி வரை வெப்பம் பதிவானது.

வெயில் அதிகரிக்கும்: இதற்கிடையே சனிக்கிழமை (மே 10) முதல் மே 14 வரை 4 நாள்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கும். அதாவது அதிகபட்ச வெப்பநிலை 105 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும், ஏனைய தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 102 டிகிரிவரையும் வெப்பம் பதிவாகும் என வானிலை மையம் வெள்ளிக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com