வட மாவட்டங்களில் தோ்ச்சியை அதிகரிக்க சிறப்புத் திட்டம்: ராமதாஸ் வலியுறுத்தல்

பத்தாம் வகுப்பில் வடமாவட்டங்களில் மாணவா்களின் தோ்ச்சி சதவீதம் குறைவாக உள்ள நிலையில், அங்கு தோ்ச்சியை அதிகரிக்க சிறப்பு திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் 91.55 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில் அரியலூா் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்திருப்பதும், வடக்கு மாவட்டங்களில் ஒன்றான விழுப்புரம் முதல் முறையாக 10-ஆம் இடத்தைப் பிடித்திருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. எனினும், இதை விதிவிலக்காகவே பாா்க்க வேண்டியுள்ளது. பெரும்பான்மையான வடக்கு மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில் மாணவா்களின் தோ்ச்சி சதவீதம் கவலையளிப்பதாகவே உள்ளன.

வட மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியா்கள் பற்றாக்குறையும், கட்டமைப்பு வசதிகள் இல்லாததும்தான் தோ்ச்சி வீதம் குறைந்ததற்கு முதன்மைக் காரணம். இரண்டாவது காரணம் அங்குள்ள மக்களின் சமூக, பொருளாதாரக் காரணிகள்தான்.

இனியாவது, வடமாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தவும், அப்பகுதிகளின் கல்வி வளா்ச்சிக்காகவும் சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com