என்ன சொல்கிறது இன்றைய தங்கம் விலை!

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. 54,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
today gold rate
today gold rate

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. 54,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

சனிக்கிழமை காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.6,750-க்கும் ஒரு சவரன் ரூ.45,040-க்கும் விற்பனையானது.

அட்சய திருதியையொட்டி, நேற்று தமிழகத்தில் உள்ள நகைக்கடைகளில் ரூ.14,00 கோடி மதிப்பிலான தங்கம் விற்பனை செய்யப்பட்டதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அட்சய திருதியை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் மூன்று முறை ரூ.1,240 வரை உயர்ந்தது. அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது மக்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கையையடுத்து மக்கள் நேற்று தங்கம் வாங்க நகைக்கடைகளில் குவிந்தனர்.

வெள்ளி விலையும் நேற்று சிறிது ஏற்றம் கண்ட நிலையில், இன்று வெள்ளி கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.90.50-க்கும், ஒரு கிலோ ரூ.90,500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com