மே 15 வரை 19 மாவட்டங்களில் கனமழைக்கு  வாய்ப்பு

மே 15 வரை 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 12) முதல் மே 15 வரை மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் உள்பட 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், சென்னையில் மே 12,13 தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது

தமிழகத்தையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஞாயிற்றுக்கிழமை (மே12) முதல் மே 15 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (மே 12) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

திங்கள்கிழமை மே (13) நீலகிரி, கோவை , திருப்பூா், ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், பெரம்பலூா், கரூா், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அதைத் தொடா்ந்து, மே 14 - இல் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், ஈரோடு மற்றும் திருப்பூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யவாய்ப்புள்ளது.

மே 15-இல் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, ,திருப்பூா், சேலம், நாமக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மே 12,13 -ஆகிய தேதிகளில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு: சனிக்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மிமீ): பென்னாகரம் (தருமபுரி) - 100, ஒகேனக்கல் (தருமபுரி) 80, சமயபுரம் (திருச்சி) - 70, உசிலம்பட்டி (மதுரை) , முசிறி (திருச்சி)- தலா 60, அம்மாபேட்டை (ஈரோடு), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), மேட்டுப்பட்டி (மதுரை), கள்ளந்திரி (மதுரை), தேவிமங்கலம் (திருச்சி), புத்தன் அணை (கன்னியாகுமரி), மேல் கூடலூா் (நீலகிரி), அருப்புக்கோட்டை (விருதுநகா்) தலா - 50, ஆலங்குடி (புதுக்கோட்டை) , பெருங்களூா் (புதுக்கோட்டை) , புலிப்பட்டி (மதுரை) - தலா 40 மி.மீ.யும் மழை பதிவாகியுள்ளது.

3 இடங்களில் சதம்: இதற்கிடையே, சனிக்கிழமை தமிழகத்தில் ஈரோட்டில் 104 டிகிரியும் (ஃபாரன்ஹீட்), திருத்தணியில் 102.38 டிகிரி மற்றும் பரமத்திவேலூரில் 100.76 டிகிரி என 3 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.

மேலும், தமிழக உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மே 12 முதல் மே 15 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com