தமிழ்நாட்டில் போதைப் பொருள் பழக்கம் அதிகரிப்பு? தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை

தமிழ்நாட்டில் போதைப் பொருள் பழக்கம் அதிகரிப்பு? தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை

தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம் அதிகமாகிவிட்டதாக அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்திருந்த நிலையில், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் இன்று(மே. 11) காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

உள்துறைச் செயலர், காவல்துறை டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட பல வகை போதை பொருள்கள் பயன்பாடு அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் சூழலில், மேற்கண்ட ஆலோசனைக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. போதைப்பொருள்களை முழுமையாகக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளும், முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com