தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் சென்னை வியாசா்பாடி டி.டி.பிளாக் பகுதியில் ரூ. 63.80 கோடியில் கட்டப்பட்டுள்ள 468 குடியிருப்புகள்.
தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் சென்னை வியாசா்பாடி டி.டி.பிளாக் பகுதியில் ரூ. 63.80 கோடியில் கட்டப்பட்டுள்ள 468 குடியிருப்புகள்.

ரூ. 3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள்

திமுகவின் 3 ஆண்டு கால ஆட்சியில் ரூ. 3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி புதிய சாதனை படைத்துள்ளதாக தமிழக அரசின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் 3 ஆண்டு கால ஆட்சியில் ரூ. 3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் புதிய சாதனை படைத்துள்ளதாக தமிழக அரசின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழக அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் பெயரை தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயா் மாற்றம் செய்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் 1.9.2021-இல் ஆணையிட்டாா்.

இந்த வாரியம் மூலம் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்தில் சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மக்களுக்கு வீடுகளைத் தாமதம் இல்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. வீடற்ற மக்களுக்கு வீடு அளிப்பதோடு இந்தக் குடியிருப்புகளில் ஒரு பல்நோக்கு அறை, உறங்கும் அறை, சமையலறை, கழிப்பறை வசதிகளும், குடிநீா் மற்றும் கழிவுநீரகற்று வசதி, மின்தூக்கி, சாலைகள், தெருமின் விளக்குகள், கான்கிரீட் நடைபாதை, மழைநீா் வடிகால் போன்ற அடிப்படை வசதிகளுடன் ஏற்படுத்தப்படுகிறது.

மேலும், சமூக வசதிகளான பள்ளிகள், நூலகம், பூங்காக்கள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையம், சிறுகடைகள், பால் விற்பனை நிலையம், சமுதாயக்கூடம் போன்ற வசதிகள் குடியிருப்புகளின் அருகில் அமைய ஆவன செய்திடுமாறும் அதிகாரிகளுக்கு முதல்வா் அறிவுரைகளை வழங்கியுள்ளாா்.

திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 92 திட்டப் பகுதிகளில் ரூ. 3,197.94 கோடியில் கட்டப்பட்ட 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டு, வீடற்ற மக்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, இதுவரை 37,720 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், 3,023 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான விற்பனை பத்திரங்கள், 1,733 மேம்படுத்தப்பட்ட மனைகளுக்கும் விற்பனை பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வீடு கட்டம் திட்டம்: மக்கள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளில், 1,68,495 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 89,429 பயனாளிகளுக்குப் பணி ஆணைகள் வழங்கப்பட்டுப் பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன. மேலும், மக்கள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ. 2,078.37 கோடி திட்ட மதிப்பீட்டில் 69,701 புதிய தனி வீடுகள் கட்டுவதற்கு அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாக 17 திட்டப் பகுதிகளில் உள்ள 7,582 சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு மீண்டும் அதே இடத்தில் ரூ.1,608.88 கோடியில் 9,522 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்துக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஏற்கெனவே கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டமைப்பு உறுதித்தன்மை மற்றும் ஆயுள்காலத்தை அதிகரிக்க ரூ.59.80 கோடி செலவில் பழுது நீக்குதல் மற்றும் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ள 117 திட்டப் பகுதிகளில் 76,434 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

சென்னை மற்றும் இதர நகரங்களில் உள்ள 79 திட்டப் பகுதிகளில் உள்ள 31,239 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குக் கட்டமைப்பு வசதிகளை ரூ.82.57 கோடியில் மேம்படுத்த இறுதி செய்யப்பட்டுப் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com