சென்னையிலிருந்து வேளாங்கண்ணி, கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள் - முன்பதிவு தொடக்கம்

சென்னையிலிருந்து வேளாங்கண்ணி, கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள் - முன்பதிவு தொடக்கம்

கோடை விடுமுறையையொட்டி சென்னையிலிருந்து வேளாங்கண்ணிக்கும் கேரளத்தின் கொச்சுவேலிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதையடுத்து இந்த ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரிலிருந்து வேளாங்கண்ணிக்கு மே. 17-ஆம் தேதி முதல், வாரம் இரு நாள்கள்(வெள்ளி மற்றும் ஞாயிறு) சிறப்பு ரயில் ( 06037) இயக்கப்படுகிறது. இந்த ரயில், மே மாதத்தில் 19, 24, 26, 31 ஆகிய நாள்களிலும், ஜூன் மாதத்தில் 2,7,9,14,16,21,23,28,30 ஆகிய நாள்களிலும் இயக்கப்படும். சென்னை எழும்பூரிலிருந்து நள்ளிரவு 11.50 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 8.30 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் வேளாங்கண்னியிலிருந்து சென்னை எழும்பூருக்கு மே. 18-ஆம் தேதி முதல், வாரம் இரு நாள்கள்(சனி மற்றும் திங்கள் கிழமைகளில்) சிறப்பு ரயில் ( 06038) இயக்கப்படுகிறது. இந்த ரயில், மே மாத்தில் 20,25,27 ஆகிய நாள்களிலும், ஜூன் மாதத்தில் 1,3,8,10,15,17, 22,24,29, ஜூலை 1 ஆகிய நாள்களிலும் இயக்கப்படும். வேளாங்கண்ணியிலிருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படும் ரயில் நள்ளிரவு 11.30 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும்.

இந்த ரயில் விழுப்புரம், பண்ருட்டி, மயிலாடுதுறை மார்க்கத்தில் இயக்கப்படுகிறது.

தாம்பரத்திலிருந்து கொச்சுவேலிக்கு மே. 16-ஆம் தேதி முதல், வாரம் இரு நாள்கள்(வியாழன் மற்றும் சனி) சிறப்பு ரயில் ( 06035) இயக்கப்படுகிறது. இந்த ரயில், மே மாதத்தில் 18,23,25,30 ஆகிய நாள்களிலும், ஜூன் மாதத்தில் 1,6,8,13,15,20,22,27,29 ஆகிய நாள்களிலும் இயக்கப்படும். தாம்பரத்திலிருந்து இரவு 9.40 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் பிற்பகல் 1.40 மணிக்கு கொச்சுவேலியை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் கொச்சுவேலியிலிருந்து தாம்பரத்துக்கு மே. 17-ஆம் தேதி முதல், வாரம் இரு நாள்கள்(வெள்ளி மற்றும் ஞாயிறு) சிறப்பு ரயில் ( 06036) இயக்கப்படுகிறது. இந்த ரயில், மே மாத்தில் 19,24,26,31 ஆகிய நாள்களிலும், ஜூன் மாதத்தில் 2,7,9,14,16,21,23,28,30 ஆகிய நாள்களிலும் இயக்கப்படும். கொச்சுவேலியிலிருந்து பிற்பகல் 3.35 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 7.35 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.

இந்த ரயில் விழுப்புரம், திருச்சி, மதுரை, சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொட்டாரக்கரா,கொல்லம் மார்க்கத்தில் இயக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com