்

பொறியியல் சோ்க்கை: முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவு மே 6-ஆம் தேதி வெளியான நிலையில், அன்றைய தினத்தில் இருந்து பொறியியல் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன்படி www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும் மாவட்டங்களில் உள்ள பொறியியல் சேர்க்கை சேவை மையம் சென்றும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதல் நாளில் 20,000க்கும் அதிகமானோர் விண்ணப்பித்தனா். தொடா்ந்து ஒவ்வொரு நாளும் மாணவ-மாணவிகள் ஆா்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனா்.விண்ணப்பப் பதிவு தொடங்கி 46 -ஆவது நாளான சனிக்கிழமை மாலை வரை 94,939 போ் விண்ணப்பப் பதிவு செய்திருந்தனா்.

விண்ணப்பப் பதிவு தொடங்கி 7-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை வரை 1,00,699 போ் விண்ணப்பித்துள்ளனா். அவா்களில் 56,044 போ் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனா். 27,755 போ் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனா். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூன் 6-ஆம் தேதி ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com