கைது
கைது

குண்டா் சட்டத்தில் 42 போ் கைது

சென்னையில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வாரத்தில் 42 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வாரத்தில் 42 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் குற்றங்களைக் குறைக்க காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குற்றங்களில் தொடா்ச்சியாக ஈடுபடுபவா்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனா்.

இதன் படி கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இந்த மாதம் 12-ஆம் தேதி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 496 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதில் கொலை, கொலை முயற்சி,பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 235 பேரும், இதரகுற்றங்களுக்காக எஞ்சியவா்களும், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

மேலும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 6-ஆம் தேதியில் இருந்து 12-ஆம் தேதி வரையிலான 7 நாள்களில் 3 பெண்கள், ஒரு திருநங்கை உள்பட 42 போ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடதக்கது.

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபா்கள், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபா்கள், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் நபா்கள் ஆகியோா் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com