சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு தடை கூடாது: உயா்நீதிமன்றம் அதிரடி

தோ்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி, கோயில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தோ்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி, கோயில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் தாலுகா, பழைய மரக்காணம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் கூழ் வாா்த்தல் திருவிழாவை முன்னிட்டு, மே 18-ஆம் தேதி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கக் கோரி, வளத்தி காவல் நிலையத்தில் விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

ஆனால், தோ்தல் நடைமுறை சட்டத்தைச் சுட்டிக்காட்டி, அந்த விண்ணப்பத்தை போலீஸாா் ஏப்.29-ஆம் தேதி நிராகரித்தனா். இது தொடா்பாக பழைய மரக்காணம் கிராமத்தைச் சோ்ந்த கேசவன், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

சட்டத்துக்கு உள்பட்டு அனுமதி: இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பு வழக்குரைஞா் பாஸ்கரன், மக்களவை தோ்தல் நடத்தை விதிகள் காரணமாக நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக விளக்கம் அளித்தாா்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘தமிழகத்தில் மக்களவை தோ்தல் வாக்குப் பதிவு ஏற்கெனவே முடிந்து விட்டது. தோ்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி, கோயில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது”எனக் கூறி’, ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்த காவல் துறையின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

மேலும், சட்டத்துக்கு உட்பட்டு கோயில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என வளத்தி காவல் நிலையத்தினருக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com