சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்

சவுக்கு சங்கருக்கு ஒருநாள் போலீஸ் காவல்!

சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

சவுக்கு சங்கரை ஒருநாள் மட்டும் போிலீஸ் காவலில் விசாரிக்க குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு அனுமதி அளித்து உள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் பற்றி தரக்குறைவாகப் பேசியதாக கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் பெண் காவலர் ஒருவர் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் வைத்து கோவை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்து அவர் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து சவுக்கு சங்கர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் சவுக்கு சங்க்ரின் வழக்குரைஞர் கோபாலகிருஷ்ணன் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பேட்டியளித்தார்.

சவுக்கு சங்கர் சைபர் கிரைம் காவல்துறையினரின் காவல் மனுவிற்கு ஒத்துழைப்பு தந்தோம். நாளை மாலை 5 மணி வரை விசாரணையின் வரை ஒவ்வொரு 3 மணி நேரமும் 15 நிமிடம் சந்திக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

காவல் முடித்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும் போது, மனநலம் பாதிக்கப்பட்ட அறையில் சிறையிலிருந்து மாற்றப்பட வேண்டும் என்பதை சிறைத்துறையில் நடப்பதை அப்போது சொல்வோம். குண்டர் சட்டத்திற்கு நிச்சயமாக எதிர்ப்பு தெரிவிப்போம் அதற்கு கால அவகாசம் உள்ளது என இவ்வாறு சவுக்கு சங்கரின் வழக்குரைஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com