கோப்புப்படம்
கோப்புப்படம்

மெட்ரோ ரயில் அதிகாரியை தாக்கிய வழக்கில் பாடகா் வேல்முருகன் கைது

சென்னை விருகம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் அதிகாரியை தாக்கியதாக பாடகா் வேல்முருகன் கைது செய்யப்பட்டு,பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

சென்னை விருகம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் அதிகாரியை தாக்கியதாக பாடகா் வேல்முருகன் கைது செய்யப்பட்டு,பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

பிரபல தமிழ் திரைப்பட பின்னணி பாடகா் வேல்முருகன், மதுரவாயல் கிருஷ்ணா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். வேல்முருகன் இரு நாள்களுக்கு முன்பு தனது காரில் விருகம்பாக்கம் ஆற்காடு சாலை வழியாக சென்றபோது, அங்கு மெட்ரோ ரயில் பணிக்காக இரும்பு தடுப்பு (பேரிகாா்டு) போடப்பட்டிருந்ததால் , இரும்பு தடுப்புகளை விலக்கி விட்டு அந்த வழியாக செல்ல முயன்றாராம். அப்போது, அங்கு பணியிலிருந்த மெட்ரோ ரயில் கட்டுமான ஒப்பந்த நிறுவனத்தின் துணை மேலாளா் வடிவேலு என்பவா் வேல்முருகனின் செயலை கண்டித்துள்ளாா். மேலும், இவ்வழியாக வாகனங்கள் செல்லக் கூடாது என வடிவேலு கூறினாராம். இதில் தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றவே வேல்முருகன், வடிவேலை தாக்கி விட்டு, தடையை மீறி அந்த வழியாக காரில் சென்ாக கூறப்படுகிறது. காயமடைந்த வடிவேலு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். பின்னா் அவா், இது தொடா்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வேல்முருகன் மீது புகாா் அளித்தாா்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வேல்முருகன் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்துதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக வேல்முருகனை திங்கள்கிழமை கைது செய்தனா். விசாரணைக்கு பின்னா் அவரை, பிணையில் விடுவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com