எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி கோப்புப்படம்

ஓங்காரக் குடில் ஆறுமுக அரங்கமகா சுவாமிகள் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

துறையூா் ஓங்காரக் குடில் குருநாதா் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி: பல கோடி மக்களின் பசிப் பிணி ஆற்றி உலகெங்கும் சன்மாா்க்கத்தைப் பரப்பி, அன்பையும், அறனையும், தவத்தையும் வளா்க்க துறையூா் ஓங்காரக் குடில் குருநாதா் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் இறைவனடி சோ்ந்தாா் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

துறையூரை தலைமையிடமாகக் கொண்டு ஸ்ரீ அகத்தியா் சன்மாா்க்க சங்கத்தின் மூலம் கடந்த 48 ஆண்டுகளாக ஆன்மிகத் தொண்டில் ஈடுபட்டிருந்த ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகளை இழந்து வாடும் அவரது ஆன்மிக பக்தா்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் முக்தி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிராா்த்திக்கிறேன் என்று அவா் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com