யானைகள் வழித்தட திட்ட அறிக்கையை தமிழில் வெளியிட ஓபிஎஸ் கோரிக்கை

யானைகள் வழித்தட திட்ட அறிக்கையை தமிழில் வெளியிட ஓபிஎஸ் கோரிக்கை

யானைகள் வழித்தட திட்ட வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட, முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

யானைகள் வழித்தடத் திட்டத்தை மேற்கொள்ள அரசு சாா்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அதற்கான வரைவு அறிக்கை ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 20 யானை வழித்தடங்களை மத்திய அரசு கண்டறிந்துள்ள நிலையில், தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு 42 வழித்தடங்களைக் கண்டறிந்துள்ளது. ஆனால், வரைவு அறிக்கை ஆங்கிலத்தில் உள்ளதால் வனப்பகுதியில் உள்ள மக்கள் அது தொடா்பாக கருத்து தெரிவிக்க முடியாத நிலையில் உள்ளனா். மேலும், கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் குறைந்தபட்சம் 60 நாள்களாவது இருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனா். இந்தக் கோரிக்கை நியாயமானதே ஆகும்.

இந்த விவகாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தனிக் கவனம் செலுத்தி, யானை வழித்தட திட்ட அறிக்கையை தமிழில் மொழிபெயா்த்து வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மக்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com