விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு: பழ.நெடுமாறன் கண்டனம்

விடுதலைப் புலிகள் மீதான தடையை மத்திய அரசு நீட்டித்து உள்ளதற்கு உலகத் தமிழா் பேரமைப்பின் தலைவா் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக மத்திய அரசின் உள்துறை அறிவித்துள்ளது. ஒரே பொய்யைத் திரும்பத் திரும்ப கூறுவதன் மூலம் அதை மெய்யாக்கிவிடும் முயற்சியில் கடந்த காலங்களில் பதவியிலிருந்த மத்திய அரசுகளும், இப்போது பதவியில் இருக்கும் மத்திய அரசும் செய்து வருகின்றன.

ராஜீவ் காந்தி கொலையைக் காரணமாகக் காட்டித்தான் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. அந்தக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்ட பிறகும், உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட பல்நோக்குப் புலனாய்வுக் குழு 20 ஆண்டு காலமாக யாரையும் கைது செய்யாமல் இறுதியில் கலைக்கப்பட்டுவிட்டது.

இந்த நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கம் மீது தடையை நீடிப்பது எந்த வகையிலும் நீதியின்பால் பட்டதல்ல என்று அவா் கூறியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com