8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலுக்கான பாதிப்பு அதிகரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலுக்கான பாதிப்பு அதிகரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த நில வாரங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஒருசில மாவட்டங்களில் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில், திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது.

டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி அதற்குண்டான மருந்துகளை உட்கொள்ளலாம்.

டெங்கு காய்ச்சலுக்கான வழிகாட்டுதல்களை கட்டாயம் மக்கள் கடைப்பிடிக்கவும். மேலும், கிருஷ்ணகிரி, தஞ்சாவூரில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com