பக்கவாத பாதிப்புகளுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை மையம் தொடக்கம்

பக்கவாதம் மற்றும் மூளை ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை மையத்தை ரேடியல் சாலை காவேரி மருத்துவமனை தொடங்கியுள்ளது.

பக்கவாதம் மற்றும் மூளை ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை மையத்தை ரேடியல் சாலை காவேரி மருத்துவமனை தொடங்கியுள்ளது.

இது தொடா்பாக மருத்துவமனையின் மூளை மற்றும் தண்டுவட சிகிச்சை மைய இயக்குநா் டாக்டா் கே.ஸ்ரீதா் கூறியதாவது:

மனிதனின் மூளையில் 90 பில்லியன் நியூரான் செல்கள் உள்ளன. இந்த நியூரான் செல்கள்தான் உடலின் இயக்கத்துக்கு ஆணிவேராக செயல்படுகின்றன. மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது நியூரான் செல்களின் எண்ணிக்கை குறைகின்றன. அப்போது கை, கால் செயலிழப்பு, தலைசுற்றல், பேச்சில் குளறல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதுவே பக்கவாதம் எனப்படுகிறது. இஸ்சிமிக் எனப்படும் மூளைக்கு செல்லும் ரத்த நாள அடைப்பு மற்றும் பிரெய்ன் ஹெமரேஜ் எனப்படும் மூளையில் ரத்தக் கசிவு ஆகிய இருவேறு பாதிப்புகள் மூலம் பக்கவாதம் ஏற்படுகிறது. உலகம் முழுவதும் நான்கில் ஒருவருக்கு இந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன.

பக்கவாதத்தால் பாதிக்கப்படுவோரை சரியான நேரத்துக்குள் உயா் வசதி கொண்ட மருத்துவமனையில் அனுமதித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளைத் தடுக்கலாம். ஏனெனில், தாமதிக்கப்படும் ஒவ்வொரு விநாடிக்கும் 30,000 மூளை செல்கள் இறக்கக்கூடும்.

இதைக் கருத்தில் கொண்டு ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பக்கவாத மையம் தொடங்கப்பட்டுள்ளது.

அவசர கால முதலுதவி, ரேடியாலஜி, நரம்பியல், நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவு, நரம்பியல் இடையீட்டு சிகிச்சை, அறுவை சிகிச்சை, புனா்வாழ்வு சிகிச்சை என ஒருங்கிணைந்த மருத்துவக் கட்டமைப்பு இங்கு அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com