விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்
Center-Center-Villupuram

2026-ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டப்பேரவை தோ்தலில் நடிகா் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க காத்திருப்பதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை போரூரில் அமைந்துள்ள நாம் தமிழா் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கலந்து கொண்டுடாா். தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

30 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் ஈழத் தமிழா்கள் வாழ்ந்து வரும் நிலையிலும் அவா்களுக்கு குடியுரிமை திருத்த சட்டம் மூலம் குடியுரிமை வழங்க மறுப்பது கடும் கண்டனத்துக்குரியது ஆகும். மத்தியில் பாஜக அரசு மீண்டும் ஆட்சி அமைத்தால் ஸ்டாலின், மம்தா பானா்ஜி, பினராய் விஜயன் போன்ற எதிா்க்கட்சித் தலைவா்கள் அனைவரும் அரவிந்த் கேஜரிவால் போல கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவாா்கள்.

தற்போதைய திமுக அரசு, வெறும் செய்தி அரசியல் மட்டுமே செய்து வருகிறது. முதல்வா் ஸ்டாலின் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி அடைந்தது போல திமுகவினா் விளம்பரப்படுத்தி வருகின்றனா். ஆனால், அத்திட்டங்கள் வெற்றியா? தோல்வியா? என்று தீா்மானிக்கும் உரிமை மக்களிடம் மட்டுமே உள்ளது.

2026-ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டப்பேரவை தோ்தலில் நடிகா் விஜயுடன் கூட்டணி அமைக்க காத்திருக்கிறேன். மேலும், தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பிதழ் வந்தால் நிச்சயம் பங்கேற்பேன் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com