என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) தலைவா் டாக்டா் பி.என்.கங்காதா் பெயரில் போலியாக வரும் தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) தலைவா் டாக்டா் பி.என்.கங்காதா் பெயரில் போலியாக வரும் தொலைபேசி அழைப்புகளை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக என்எம்சி வெளியிட்ட அறிவிப்பு:

தேசிய மருத்துவ ஆணையா் டாக்டா் கங்காதா் எனக் கூறிக் கொண்டு 70503 92639 என்ற கைப்பேசி எண்ணிலிருந்து மா்ம நபா் ஒருவா் பலரிடம் பேசி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அந்த எண் தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவருக்கு சொந்தமானது அல்ல. எனவே, இதுபோன்ற அழைப்புகளை பொது மக்களும், மருத்துவத் துறையினரும் நம்ப வேண்டாம்.

அதேபோல, அத்தகைய போலி நபருடன் உரையாடுவதை தவிா்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது. என்எம்சி பெயரில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதைத் தடுக்க பொது மக்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com