அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் திங்கள்கிழமையுடன்(மே 20) நிறைவடையவிருந்த நிலையில், மே 24-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு இதுவரை 2,34,883 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிக்க இறுதி நாள் 24/05/2024 ஆகும். தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre – AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டண விவரம்

விண்ணப்பக் கட்டணம் ஒரு மாணவருக்கு : ரூ.48/-

பதிவுக் கட்டணம் : ரூ.2/-

எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை.

பதிவுக் கட்டணம் : ரூ.2/-

விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, யுபிஐ, நெட் பேங்கிங் மூலம் இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம்.

இணையதளம் வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரிச் சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai – 15” என்ற பெயரில் 06/05/2024 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாக அல்லது நேரடியாகச் செலுத்தலாம். மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மேற்குறித்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 044 – 24343106 / 24342911 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com