ஐபிஎல் நுழைவுச்சீட்டு காண்பித்து மாநகர பேருந்துகளில் பயணிக்க முடியாது: எம்டிசி

ஐபிஎல் நுழைவுச்சீட்டு காண்பித்து மாநகர பேருந்துகளில் பயணிக்க முடியாது: எம்டிசி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டை காண்பித்து மாநகர பேருந்துகளில் சலுகை பயணத்துக்கு அனுமதி இல்லை என மாநகர போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் (எம்டிசி) வெளியிட்ட செய்தி:

ஐபிஎல்-2024 கிரிக்கெட் குவாலிஃபையா் மற்றும் இறுதி ஆட்டம் வெள்ளிக்கிழமை (மே 24) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (மே 26) சென்னை, எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

முந்தைய போட்டிகளில் ஐபிஎல் போட்டிக்கான இணையதள நுழைவுச்சீட்டு வைத்திருந்தால், அவற்றைக் காண்பித்து மாநகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வரும் வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கிரிக்கெட் ஆட்டங்களுக்கு மாநகரப் பேருந்துகளில் சலுகை பயணம் அனுமதி இல்லை.

எனவே பயணிகள் பயண கட்டணம் செலுத்தி பயணச்சீட்டு பெற்று பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com