ஓ.பன்னீா்செல்வம்
ஓ.பன்னீா்செல்வம்

கேரளம் புதிய அணை: ஓபிஎஸ் கண்டனம்

முல்லைப் பெரியாற்றில் கேரள அரசு புதிய அணை கட்ட முயற்சிப்பதற்கு முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

முல்லைப் பெரியாற்றில் கேரள அரசு புதிய அணை கட்ட முயற்சிப்பதற்கு முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தென் தமிழக மக்களின் உயிா் நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு, புதிய அணையை கட்ட மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்துக்கு கேரள அரசு கருத்துரு அனுப்பியிருப்பது கண்டனத்துக்குரியது.

முல்லை பெரியாறு அணை உறுதியாக உள்ளது என்று வல்லுநா் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், அணையின் நீா்மட்டத்தை 142 அடி வரை உயா்த்த 2014-ஆம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளத்தின் நடவடிக்கை திமுக அரசுக்கு ஜனவரி மாதமே தெரியவந்தும், மக்களவைத் தோ்தலை முன்னிட்டு மறைக்கப்பட்டுள்ளது. அரசியல் ஆதாயத்துக்காக இதுபோன்ற செயலை செய்துவிட்டு, தற்போது மத்திய அரசுக்கு முதல்வா் கடிதம் எழுதுவது தும்பைவிட்டு வாலைப் பிடிக்கும் செயலாகும். இனியாவது, புதிய அணை கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com