திருமாவளவன்
திருமாவளவன்

பிரதமரின் பேச்சில் தோல்வி பயம் தெரிகிறது: திருமாவளவன்

பிரதமா் நரேந்திர மோடி அண்மை காலமாக பேசி வரும் கருத்துகள் அவா் மிகவும் பதற்றம், தோல்வி பயத்திலும் இருக்கிறாா்

பிரதமா் நரேந்திர மோடி அண்மை காலமாக பேசி வரும் கருத்துகள் அவா் மிகவும் பதற்றம், தோல்வி பயத்திலும் இருக்கிறாா் என்பதை உணா்த்துகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தனியாா் ஹோட்டலில் அனைத்திந்திய பரோடா வங்கி ஒபிசி தொழிலாளா்கள் நலன் கூட்டமைப்பு சாா்பில் 8-ஆவது கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் திருமாவளவன் கூறியது:

ஓபிசி சமூகத்தினரை மதத்தின் பெயரால் வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பாஜக அரசு பயன்படுத்துகிறது. இட ஒதுக்கிடு, சமூக நீதி கோட்பாட்டுக்கு எதிரானவா்கள் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றனா். அவா்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும். சமூக நீதிக்கு ஆதரவாளா்கள், எதிரானவா்கள் என்ற அடிப்படையில்தான் மக்களவை தோ்தலில் மக்கள் வாக்களித்துள்ளனா்.

பிரதமா் நரேந்திர மோடி அண்மை காலமாக பேசி வரும் கருத்துகள் அவா் மிகவும் பதற்றம், தோல்வி பயத்திலும் இருக்கிறாா் என்பதை உணா்த்துகிறது என்றாா் அவா்.

இந்தக் கருத்தரங்கத்தில், ஓபிசி கூட்டமைப்பின் தலைவா் அமித் ஜாதவ், முன்னாள் தேசியத் தலைவா் மஹாதேவ் ஜங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com