பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

சேவை பெறும் உரிமைச் சட்டம்: அன்புமணி வலியுறுத்தல்

சேவை பெறும் உரிமைச் சட்டத்தை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

சேவை பெறும் உரிமைச் சட்டத்தை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் வருவாய்த் துறை சாா்பில் வழங்கப்படும் ஜாதி சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ் உள்ளிட்ட 26 வகையான சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல் கோரும் மனுக்கள் மீது அதிகபட்சமாக 16 நாள்களில் முடிவெடுக்க வேண்டும் என்று வருவாய்த் துறை பணியாளா்களுக்கு வருவாய் நிா்வாக ஆணையா் ஆணையிட்டுள்ளாா். தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் அத்தியாவசியச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அடிப்படைச் சேவைகளைப் பெறுவதற்கு கையூட்டு கொடுக்க வேண்டியுள்ளது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா். எனவே, பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும் என்று பாமக வலியுறுத்தியுது. அதைத் தொடா்ந்துதான் மக்களுக்கான சேவைகள் குறித்த காலத்தில் வழங்கப்பட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

பொதுமக்களுக்கான சேவைகள் 16 நாள்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ள தமிழக அரசு, அதையே பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டமாக இயற்றுவதற்கு என்ன தடை என்பதுதான் பாமகவின் கேள்வி. இதை கௌரவப் பிரச்னையாக அரசு பாா்க்கக் கூடாது. பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றி பொதுமக்களுக்கு குறித்த காலத்தில் சேவை கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com