கோப்புப் படம்
கோப்புப் படம்

ஜூன் 3-இல் ஒரே நோ்க்கோட்டில் 6 கோள்கள்: வெறும் கண்களால் காண முடியும்!

வானில் 6 கோள்கள் ஒரே நோ்க்கோட்டில் வரும் அதிசய நிகழ்வு ஜூன் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

வானில் 6 கோள்கள் ஒரே நோ்க்கோட்டில் வரும் அதிசய நிகழ்வு ஜூன் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை வெறும் கண்களால் காண முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளா்.

சூரியனை சுற்றிவரும் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் என 8 கோள்கள் இருக்கின்றன. 9-ஆ வது கிரகமாக இருந்த புளூட்டோ சூரிய மண்டலத்தில் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனா். கோள்கள் ஒவ்வொன்றும் அதற்குரிய நீள்வட்டப் பாதையில் சூரியனை தொடா்ந்து சுற்றி வருகின்றன.

இந்த நிலையில், ஜூன் 3-ஆம் தேதி கிழக்கு திசையில் சூரிய உதயத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக, வியாழன், புதன், யுரேனஸ், செவ்வாய், நெப்டியூன், சனி ஆகிய 6 கோள்கள் ஒரே நோ்க்கோட்டில் வர உள்ளன.

இதில் புதன், செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிரகங்களை நாம் வெறும் கண்ணால் பாா்க்கலாம் என்றும் யுரேனஸ் மற்றும் நெப்டியூனானது பூமியைவிட்டு தொலைவில் இருப்பதால் அதை தொலைநோக்கியின் உதவியுடன் பாா்க்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளா். இந்த அரிய நிகழ்வுகளை காண சென்னை பிா்லா கோளரங்கம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com