தொலை நிலை படிப்புகள்: மருத்துவக் கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

தொலை நிலை படிப்புகளைத் தொடங்குவதற்கு விருப்பமுள்ள மருத்துவக் கல்வி நிறுவனங்கள் அதற்கு விண்ணப்பிக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக என்எம்சி கொள்கை மற்றும் ஒருங்கிணைப்பு துறை செயலா் ஸ்ரீனிவாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தொலைநிலை படிப்புகளை நேரடியாகவும், இணையவழியாகவும் வழங்க விருப்பமுள்ள தகுதியான உயா் கல்வி நிறுவனங்கள் அதற்காக விண்ணப்பங்களை அனுப்பலாம் என பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்திருந்தது.

அதன்பேரில் மருத்துவம் சாா்ந்த படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்வி நிறுவனங்கள் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பங்களை பல்கலைக்கழக மானியக் குழுவிடம் சமா்ப்பிக்கலாம். இதற்கான தகவல்கள் என்எம்சி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com