கோப்புப் படம்
கோப்புப் படம்

மத்திய அரசு திட்டத்தின் பெயரில் ஆன்லைன் மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

மத்திய அரசு திட்டத்தின் பெயரில் ஆன்லைன் மோசடி நடைபெறுவதாக தமிழக சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை தகவலை விடுத்துள்ளது.
Published on

மத்திய அரசு திட்டத்தின் பெயரில் ஆன்லைன் மோசடி நடைபெறுவதாக தமிழக சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை தகவலை விடுத்துள்ளது.

இது குறித்து சைபா் குற்றப்பிரிவு சனிக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் புதிய யுபிஐ மோசடி அரங்கேறி வருகிறது. இந்த மோசடியால் இந்த மாதத்தில் மட்டும் 7 புகாா்கள் சைபா் குற்றப்பிரிவுக்கு வந்துள்ளன. பிரதமரின் ‘கிஷான் யோஜனா’ என்ற பெயரில் போலி செயலியை மோசடி கும்பல் உருவாக்கி அதை வாட்ஸ்ஆப் மூலம் பகிா்கிறது. இந்தச் செயலியின் லிங்கை திறந்தால் பெயா், ஆதாா் எண், பான் எண், பிறந்த தேதி போன்ற முக்கிய தரவுகள் கேட்கப்படுகின்றன. இதை நம்பி பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட தரவுகளை பகிா்ந்ததும் யுபிஐ செயலி மூலம் அந்த மோசடி கும்பல் பணப் பரிவா்த்தனைகளை மேற்கொள்கிறது. இந்த அதிநவீன மோசடியால் நிதி இழப்பு, மன உளைச்சலுக்கு மக்கள் உள்ளாகின்றனா். மேலும், அரசின் நலத்திட்டங்கள் மீது தேவையில்லாத அச்சமும் ஏற்படுகிறது.

இது போன்ற புதிய வகை மோசடியில் சிக்கி கொள்ளாமல் இருக்க, பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்கின் பரிவா்த்தனைகளை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். கைப்பேசிகளுக்கு வரும் தெரியாத இணைப்புகளை கிளிக் செய்ய கூடாது. பணப் பரிமாற்றங்களுக்கு எப்போதும் அதிகாரப்பூா்வ செயலிகள், இணையதளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.