பிரதான வழக்குகள் மீதான விசாரணை முடியும் வரை அமலாக்கத் துறை வழக்கு விசாரணையை ஒத்திவைக்கக் கோரி அமைச்சா் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு திரும்பப் பெறப்பட்டதைத் தொடா்ந்து, அதை தள்ளுபடி செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போதைய மின் துறை அமைச்சா் செந்தில் பாலாஜி, முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தபோது, அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடமும் பணம் பெற்று மோசடி செய்ததாக அவா் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் 3 வழக்குகளைப் பதிவு செய்தனா்.
இந்த வழக்குகள் சென்னை மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந்த பிரதான வழக்குகளின் அடிப்படையில் அமைச்சா் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்தனா். இந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஒத்திவைக்கக் கோரி மனு: இந்நிலையில், தனக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பிரதான வழக்குகள் மீதான விசாரணை முடியும் வரை, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் அமைச்சா் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தாா். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிா்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மறு ஆய்வு மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில், மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையேற்ற நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.
டிரெண்டிங்

கரூர் பலி: மார்ச் 17-ல் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி!

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: அமலாக்கத் துறை மனு மீது ஏப். 20 இல் விசாரணை

ஆவின் முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சா் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: அமலாக்கத் துறை மேல்முறையீட்டு மனு மீது தில்லி உயா்நீதிமன்றத்தில் மாா்ச் 9-இல் விசாரணை
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

