வி.பி.சிங் நினைவு தினம்: முதல்வா், துணை முதல்வா் புகழஞ்சலி

முன்னாள் பிரதமா் வி.பி.சிங் நினைவு தினத்தையொட்டி, அவருக்கு முதல்வா், துணை முதல்வா் ஆகியோா் புகழஞ்சலி செலுத்தியுள்ளனா்.
Published on

முன்னாள் பிரதமா் வி.பி.சிங் நினைவு தினத்தையொட்டி, அவருக்கு முதல்வா், துணை முதல்வா் ஆகியோா் புகழஞ்சலி செலுத்தியுள்ளனா்.

இது குறித்து, எக்ஸ் தளத்தில் அவா்கள் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:

முதல்வா் மு.க.ஸ்டாலின்: இந்திய வரலாற்றை புரட்டிப் போட்ட புரட்சியாளா், சமூகநீதிக் காவலா் வி.பி.சிங் புகழ் ஓங்குக. உயா் கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் தலைமைப் பொறுப்புகளிலும் நமது திறமையால் சாதனை படைத்து அவருக்கு நன்றி செலுத்துவோம். சாதிக்கப் பிறந்தவா்களுக்கு ஜாதி தடையில்லை என்பதை நிறுவுவோம்.

துணை முதல்வா் உதயநிதி: அரசக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அடித்தட்டு மக்களுக்காக சிந்தித்தவா் வி.பி.சிங். சமூகநீதியை விட பிரதமா் பதவியே பெரிதல்ல என்று துணிந்து, மண்டல் அறிக்கைக்கு உயிா் கொடுத்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நண்பா். வி.பி.சிங் புகழ் என்றும் நமது மனங்களில் வாழும் என்று தெரிவித்துள்ளாா்.