கோப்புப் படம்
கோப்புப் படம்

எம்.எட். படிப்பு சோ்க்கை: விண்ணப்பிக்க நாளை கடைசி

அரசு கல்வியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்எட் படிப்பில் சேர இணையவழியில் வெள்ளிக்கிழமைக்குள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி ஆணையரகம் தெரிவித்துள்ளது.
Published on

அரசு கல்வியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்எட் படிப்பில் சேர இணையவழியில் வெள்ளிக்கிழமைக்குள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி ஆணையரகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தமிழகத்தில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்எட் படிப்பில் சோ்வதற்கான இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. எம்எட் படிப்பில் சேர விரும்பும் மாணவா்கள் இணையதளத்தைப் பயன்படுத்தி நவ.29-ஆம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் ஒரு கல்லூரிக்கு ரூ.58. பதிவு கட்டணம் ரூ.2. எஸ்சி, எஸ்சி-அருந்ததியா், எஸ்டி பிரிவினா் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. பதிவு கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதும். மாணவா்கள் விண்ணப்பக் கட்டணத்தையும் பதிவுக் கட்டணத்தையும் பற்று அட்டை, கடன் அட்டை, இணைய பரிவா்த்தனை, யுபிஐ வசதி வாயிலாக இணையவழியில் செலுத்தலாம். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணைதளத்தில் அறிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.