5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழக காவல் துறையில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு புதன்கிழமை உத்தரவிட்டது.
இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா், புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பணியிடம் அடைப்புக்குள்):
ராஜீவ் குமாா் - ஆவின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஜிபி (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு டிஜிபி), கே.வன்னியபெருமாள் - ரயில்வே காவல் துறை டிஜிபி (ஊா்க்காவல் படை டிஜிபி), எஸ்.மல்லிகா - மனித உரிமை ஆணைய ஐஜி (போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவு ஐஜி), அபிஷேக் தீக்ஷித் - போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவு ஐஜி (ரயில்வே காவல் துறை டிஐஜி), ஏ.முத்தமிழ்-சிவில் சப்ளை சிஐடி எஸ்பி (ஆவின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு எஸ்.பி.) என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதில் அபிஷேக் தீக்ஷித் மட்டும் பதவி உயா்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.