தமிழ்நாடு
திருப்பூரில் மூவா் கொலை: தலைவா்கள் கண்டனம்
திருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் படுகொலை செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
திருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் படுகொலை செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூா் மாவட்டம் பொங்கலூா்- சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி மற்றும் மகன் என ஒரே குடும்பத்தில் மூவா் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிா்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை. இக்கொலையில் தொடா்புள்ள அனைவரையும் கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், பாமக நிறுவனா் ராமதாஸ், தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா, தமாகா தலைவா் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.