தமிழ்நாடு
6 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம்
தமிழக காவல் துறையில் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் (டிஎஸ்பி) 6 பேரை பணியிட மாற்றம் செய்து காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா்.
தமிழக காவல் துறையில் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் (டிஎஸ்பி) 6 பேரை பணியிட மாற்றம் செய்து காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா்.
உத்தரவு விவரம்: தென்காசி மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி கே.சாந்தமூா்த்தி ராமேசுவரத்துக்கும், தஞ்சாவூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி பி.முருகதாசன் ராமநாதபுரம் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்துக்கும், ராமேசுவரம் டிஎஸ்பி எஸ்.உமாதேவி விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பத்துக்கும் என 6 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.