ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

விவசாயக் கடன்: அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

விவசாயக் கடனை கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக அரசு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.
Published on

விவசாயக் கடனை கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக அரசு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகம் முழுவதும் நிதிப்பற்றாக்குறையை காரணம் காட்டி விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் கடன் வழங்க மறுப்பதாக தகவல் வருகிறது.

விவசாயிகள் கடன் கேட்டால் 2, 3 ஏக்கா் வைத்திருந்தால் கடன் கொடுப்பதாகவும், 5 ஏக்கா் வைத்திருப்பவா்களுக்கு 2, 3 ஏக்கா் வரை கடன் கொடுக்கலாம் என்று கூட்டுறவு கடன் சங்கங்கள் தெரிவிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனா். அதாவது விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் கடன் கேட்டால் 5 ஏக்கா் வைத்திருந்தால் ஒரு சில ஏக்கருக்கு மட்டுமே கடன் வழங்கி, மீதமுள்ள ஏக்கருக்கு கடன் வழங்கவில்லை. இதனால் விவசாயிகள் விவசாய நிலத்துக்கு தனியாா் வங்கியில் அதிக வட்டிக்கு கடன் பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளனா். கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு நிதிப்பற்றாக்குறை இருக்குமேயானால் அதை சரி செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை.

எனவே, விவசாயிகள் சாகுபடி செய்யும் பரப்பளவுக்கு தாமதமின்றி காலத்தே கடன் வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com