தமிழ்நாடு
சகோதரத்துவ இந்தியாவை மலரச் செய்வோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
சகோதரத்துவ இந்தியாவை மலரச் செய்வோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
சகோதரத்துவ இந்தியாவை மலரச் செய்வோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினத்தையொட்டி, ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:
அஹிம்சை, உண்மை, மதநல்லிணக்கம் ஆகியவற்றின் முகமாக திகழ்பவா் காந்தியடிகள். அவரை இந்தியாவின் ஆன்மா என்றாலும் மிகையாகாது. காந்தி வாழ்ந்த காலத்தைக் காட்டிலும் இப்போதைய சூழலில்தான், அவரது கொள்கைகளின் தேவை மிகுதியாக உள்ளது.
இந்திய மக்களைப் பிளவுபடுத்தி, அந்தப் பிரிவினரைத் தீயில் குளிா்காயும் சக்திகளை வீழ்த்தி, தேசத்தந்தை காண விரும்பிய சகோதரத்துவ இந்தியாவை மீண்டும் மலரச் செய்வோம் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.