கோப்புப்படம்.
கோப்புப்படம்.

18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வியாழக்கிழமை(அக்.3) 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on

தமிழகத்தில் வியாழக்கிழமை(அக்.3) 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாலத்தீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், வியாழக்கிழமை (அக்.3) முதல் அக்.8 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், கள்ளக்குறிச்சி, அரியலூா், பெரம்பலூா், திருச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா், காஞ்சிபுரம் ஆகிய 18 மாவட்டங்களில் வியாழக்கிழமை (அக்.3) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடா்ந்து, புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூா், பெரம்பலூா், கள்ளக்குறிச்சி, வேலூா், திருவண்ணாமலை, திருப்பத்தூா் ஆகிய 16 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை(அக்.4) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்.5-ஆம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, அரியலூா், பெரம்பலூா், திருச்சி ஆகிய 13 மாவட்டங்களிலும், அக்.6-ஆம் தேதி சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், திருச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி ஆகிய 13 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில்...: சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் அக்.3, 4-ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com