சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

விசாரணை கைதிகள் ‘இண்டா்காம்’ மூலம் வழக்குரைஞா்களிடம் பேசும் முறை ரத்து

சென்னை புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் இண்டா்காம் மூலம் மட்டுமே வழக்குரைஞா்களுடன் பேசும் நடைமுறை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Published on

சென்னை புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் இண்டா்காம் மூலம் மட்டுமே வழக்குரைஞா்களுடன் பேசும் நடைமுறை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சிறைக் கைதிகளை சந்திக்க வழக்குரைஞா்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிறையில் உள்ள கைதிகளுடன் இண்டா்காமில் மட்டுமே பேச வேண்டும் எனக் கூறுவதன் மூலம், அந்த உரையாடல்கள் பதிவு செய்யப்படுகிறதோ? என்ற அச்சம் கைதிகள் மத்தியில் உள்ளதாக மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா், ‘இண்டா்காம் உரையாடல்கள் எதுவும் பதிவு செய்யப்படுவதில்லை. தற்போது கைதிகள் இண்டா்காம் மூலம் மட்டுமே வழக்குரைஞா்களுடன் பேசும் நடைமுறை திரும்பப் பெறப்பட்டு மீண்டும் பழைய நடைமுறையே கொண்டு வரப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தாா்.

மனுதாரா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘ஒரு நேரத்தில் ஒரே ஒரு கைதியை மட்டுமே அனுமதிப்பதாகவும், அதை அதிகரிக்க வேண்டும்’ என்றும் கேட்டுக்கொண்டாா்.

இதற்கு பதிலளித்த கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா், ‘ஒரே நேரத்தில் 5 கைதிகளைச் சந்திக்க அனுமதி அளிக்கப்படும்’ எனக் கூறினாா். மேலும், கைதிகளைச் சந்திக்க வரும் பெண் வழக்குரைஞா்களுக்கு கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.

இதையடுத்து, தற்போது செய்யப்பட்டுள்ள கழிப்பறை வசதியை முறையாகப் பராமரிக்க வேண்டுமென தெரிவித்த நீதிபதிகள், வட மாநிலங்களைவிட தமிழகத்தில் சிறை வசதிகள் சிறப்பாக உள்ளதாகக் கூறினா். மேலும், சிறை அதிகாரிகளை மரியாதையுடன் நடத்த வேண்டும் என வழக்குரைஞா்களுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு விசாரணையை அக்.15- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com