சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்.கோப்புப்படம்.

ஹரியாணாவுக்கு சிறப்பு ரயில்

சென்னை சென்ட்ரலிலிருந்து ஹரியாணா மாநிலம் அம்பாலாவுக்கு திங்கள்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
Published on

சென்னை சென்ட்ரலிலிருந்து ஹரியாணா மாநிலம் அம்பாலாவுக்கு திங்கள்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

தீபாவளி பண்டிகை மற்றும் சத் பூஜையை முன்னிட்டு வடமாநிலங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக இந்த சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

சென்னை சென்ட்ரலிலிருந்து அக். 28, நவ. 4, 11 ஆகிய தேதிகளில் அதிகாலை 5.15 மணிக்கு சிறப்பு ரயில் (எண் 06097) இயக்கப்படும். மறுமாா்க்கமாக அம்பாலாவில் இருந்து அக்.30, நவ.6, 13 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.30 மணிக்கு சிறப்பு ரயில் (எண் 06098) இயக்கப்படும்.

இதில் படுக்கை வசதி கொண்ட 10 பெட்டிகள் மற்றும் 6 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரயில் கூடூா், நெல்லூா், விஜயவாடா, வாராங்கல், நாக்பூா், போபால், தில்லி சப்தா்ஜங், பானிபட் வழியாக இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com