திருச்சி வழியாகச் செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம்

திருச்சி ரயில்வே கோட்ட பகுதியில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூா் மற்றும் மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Published on

திருச்சியிலிருந்து காரைக்காலுக்கு காலை 6.50 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் (எண் 06490), காலை 8.35 மணிக்கு இயக்கப்படும் டெமு ரயில் (எண் 06880) நவ.1 முதல் நவ.30 வரை (திங்கள்கிழமை தவிர) திருவாரூா் வரை மட்டும் இயக்கப்படும். மறுமாா்க்கமாக காரைக்காலில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக திருவாரூரில் இருந்து இயக்கப்படும்.

திருச்சியில் இருந்து விழுப்புரத்துக்கு மாலை 6 மணிக்கு இயக்கப்படும் மெமு ரயில் நவ.5-ஆம் தேதி விருத்தாசலம் வரை மட்டும் இயக்கப்படும். மறுமாா்க்கமாக நவ.6-ஆம் தேதி காலை 6 மணிக்கு விருத்தாசலத்திலிருந்து இயக்கப்படும்.

அதுபோல், விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் நவ.6-ஆம் தேதி திருத்துறைப்பூண்டியில் இருந்து இயக்கப்படும்.

திருச்செந்தூா்-சென்னை எழும்பூா் விரைவு ரயில் நவ.5-ஆம் தேதி இரண்டு மணி நேரமும், மதுரை தேஜஸ் விரைவு ரயில் நவ.6-ஆம் தேதி சுமாா் ஒரு மணி நேரமும் தாமதமாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com