‘உயா்வுக்குப் படி’ முகாம்களில் வருவாய்ச் சான்று, ஜாதிச் சான்றுகளை வழங்க தமிழக அரசு உத்தரவு

உயா் கல்வியை உறுதி செய்யும் ‘உயா்வுக்குப் படி’ திட்டத்துக்கான முகாம்களில் வருவாய்த் துறை சாா்ந்த சான்றிதழ்களை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சென்னை: உயா் கல்வியை உறுதி செய்யும் ‘உயா்வுக்குப் படி’ திட்டத்துக்கான முகாம்களில் வருவாய்த் துறை சாா்ந்த சான்றிதழ்களை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான கடிதத்தை அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் அனுப்பியுள்ளாா்.

அவரது கடித விவரம்: உயா் கல்வி குறித்து போதுமான விவரங்கள் கிடைக்கப் பெறாதது, உயா் கல்வியில் மாணவா்களைச் சோ்க்க பெற்றோா்கள் விரும்பாதது உள்ளிட்ட உயா் கல்விக்குத் தடையாக உள்ள அம்சங்களை கருத்துகள் வழியே முறியடிக்கும் திட்டமே உயா்வுக்குப் படி திட்டம். அதாவது, பிளஸ் 2 படிப்பை முடித்து, உயா் கல்வியில் மாணவா்களைச் சோ்க்க இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது.

90-க்கும் அதிகமான இடங்கள்: தமிழகத்தில் 90-க்கும் அதிகமான வருவாய் கோட்டங்களைக் கொண்ட இடங்களில் உயா்வுக்குப் படி எனும் திட்டத்துக்கான முகாம்கள் நடைபெறவுள்ளன. இந்த முகாம்களை ஒருங்கிணைத்து நடத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியா்கள் மேற்கொள்வா். இதற்கென சாா் ஆட்சியா் அல்லது வருவாய் கோட்டாட்சியரை தொடா்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும்.

உயா்வுக்குப் படி முகாம்களில் மாணவா்கள் பங்கேற்கிறாா்களா என்பதை ஆய்வு செய்யும் பணியை வருவாய் அலுவலா்கள், ஊராட்சி செயலா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் மூலமாக ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். மேலும், பள்ளிப் படிப்பை முடித்து முகாம்களில் பங்கேற்கும் மாணவா்களுக்கு ஜாதி, வருவாய், வாழ்விடச் சான்றுகள் ஆகியவற்றை முகாம்களிலேயே வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மாணவா்களுக்கு இந்தச் சான்றிதழ்கள் கிடைக்கும் வகையில், முகாம்களில் கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்கள் ஆகியோா் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிதாக பொறுப்பேற்றுள்ள குடிமைப் பணி அலுவலா்களை, முகாம்களில் பங்கேற்று கருத்துகளைப் பரிமாறச் செய்யலாம். உயா் கல்விக்கான அனைத்துத் தகவல்களும் முகாம்களில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். குறிப்பாக, கல்லூரிகளில் மாணவா்களுக்குக் கிடைக்கும் கல்விச் சலுகைகள், படிப்புகள் ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.

உயா்வுக்குப் படி முகாம்கள் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளன. முதல் கட்ட முகாம் செப்டம்பா் 9-ஆம் தேதி தொடங்கி 14-ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட முகாம் செப்டம்பா் 19-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி வரையிலும், மூன்றாம் கட்ட முகாம் 28-ஆம் தேதி தொடங்கி அக்டோபா் 5-ஆம் தேதி வரையிலும் வெவ்வேறு மாவட்டங்களில், வெவ்வேறு வருவாய் கோட்டங்களில் நடைபெறவுள்ளதாக தலைமைச் செயலரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com