அகில இந்திய தொழிற்தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
அகில இந்திய தொழிற்தோ்வுக்கு தனித் தோ்வா்களாக பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற் பயிற்சிக் குழுமத்தால் அகில இந்திய தொழிற்தோ்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தத் தோ்வில் தனித் தோ்வா்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை www. skilltraining.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். தோ்வுக் கட்டணமாக ரூ.200 செலுத்தி பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன், மாவட்ட அரசினா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க செப். 18-ஆம் தேதி கடைசி நாள்.
தகுதியுள்ள விண்ணப்பதாரா்களுக்கு முதனிலைத் தோ்வுகள் அக். 15-ஆம் தேதியும், செய்முறைத் தோ்வு அக். 16-ஆம் தேதியும் கிண்டியிலுள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.