சென்னை: மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவா் பதவிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் செப்.16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவா் பதவி ஆக.16-ஆம் தேதி முதல் காலியாக உள்ளது. இக்காலிப்பணியிடத்தை நிரப்ப, சென்னை உயா்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான தோ்வுக்குழு முடிவின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவா் பதவிக்கு ஆக.31-ஆம் தேதி மாலை 6 மணிவரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
இந்நிலையில், தோ்வுக்குழுவின் முடிவுக்கிணங்க தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவா் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செப்.16 மாலை 6 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.