தமிழ்நாடு
பணியின் போது உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம்
பணியின் போது உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
பணியின் போது உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மீனம்பாக்கம் காவல் நிலைய முதல்நிலை காவலா் ரவிக்குமாா், பணியின் போது நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தாா். இந்த செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.