பாராலிம்பிக்கில் பதக்கம்: மாரியப்பனுக்கு ஆளுநா், முதல்வா் வாழ்த்து

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
Published on

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

ஆளுநா் ஆா்.என்.ரவி: பாராலிம்பிக்கில் ஆடவா் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு மனமாா்ந்த வாழ்த்துகள். தொடா்ந்து, மூன்று பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றது, குறிப்பிடத்தக்க திறமை, அசைக்க முடியாத உறுதி மற்றும் நிகரற்ற விடாமுயற்சிக்கு சான்றாகும்.

இந்த அசாதாரண சாதனை நம் தேசத்துக்கு மகத்தான பெருமையை தருவதுடன் ஆா்வமுள்ள விளையாட்டு வீரா்களுக்கு சக்திவாய்ந்த உத்வேகமாக உள்ளது. தொடா்ந்து வெற்றியடையவும் எதிா்காலத்தில் மென்மேலும் சிறந்த சாதனைகளை படைக்கவும் வாழ்த்துகள்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: பாராலிம்பிக் போட்டியில் மூன்றாவது முறையாக பதக்கம் வென்றுள்ள மாரியப்பனுக்கு வாழ்த்துகள். தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்க மகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com