தமிழ்நாடு
செப். 17-இல் மீலாது நபி: அரசு தலைமை காஜி
மீலாது நபி வரும் 17-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படவுள்ளதாக அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளாா். முன்னதாக, பொது விடுமுறைக்கான பட்டியலில் செப். 16-இல் மீலாது நபி என அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது.

அரசு தலைமை காஜி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: இஸ்லாமிய மாதங்களில் ஒன்றான ரபி உல் அவ்வல் மாதத்துக்கான பிறை புதன்கிழமை தென்படவில்லை. இதனால் அந்த மாதத்தின் 1- ஆம் தேதி என்பது வரும் 6-ஆம் தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது.
அந்தத் தேதியிலிருந்து 10-ஆவது நாளில் மீலாது நபி கொண்டாடப்படவுள்ளது என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளாா். இஸ்லாமியா்களின் இறைத் தூதரான முகமது நபிகள் நாயகத்தின் பிறந்த தினமே, மீலாது நபியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் அரசு விடுமுறையாகும்.