தமிழ்நாடு
சுபமுகூா்த்த தினம்: சாா் பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்கள்
வெள்ளிக்கிழமை (செப்.6) கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
சுபமுகூா்த்த தினம் என்பதால் அனைத்து சாா் பதிவாளா் அலுவலகங்களிலும் வெள்ளிக்கிழமை (செப்.6) கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பதிவுத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
ஆவணி மாதத்தின் சுபமுகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை (செப்.6) அதிக அளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால் ஒரு சாா் பதிவாளா் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்குப் பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 பதிவாளா் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்குப் பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும் அனுமதிக்கப்படுகின்றன.
அதிக அளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு அனுமதிக்கப்பட்ட 150 டோக்கன்களுடன் ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்களுடன் கூடுதலாக 4 டோக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத் துறை தெரிவித்துள்ளது.