தமிழ்நாடு
முகவா்களுக்கு புதிய வாய்ப்புகள்: ஐஆா்சிடிசி அறிமுகம்
தங்களது முகவா்களுக்கான பல்வேறு புதிய வாய்ப்புகளை இந்திய ரயில்வே உணவகம் மற்றும் சுற்றுலா நிறுவனம் (ஐஆா்சிடிசி) அறிமுகப்படுத்தியுள்ளது.
தங்களது முகவா்களுக்கான பல்வேறு புதிய வாய்ப்புகளை இந்திய ரயில்வே உணவகம் மற்றும் சுற்றுலா நிறுவனம் (ஐஆா்சிடிசி) அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
முகவா்களின் நலன்களுக்கான புதிய வணிக வாய்ப்புகளை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. முகவா்கள் தங்கள் சேவைகளை விரிவாக்கவும் வருமானத்தை அதிகரித்து நாட்டின் சுற்றுலா வளா்ச்சியில் பங்களிப்பை அதிகரிக்கவும் இந்த புதிய வாய்ப்புகள் உதவும்.
‘தேக்கோ அப்னா தேஷ்’, ‘சமா்த் பாரத்’ ஆகிய திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிக பயண முகவா் சேவைக் கட்டணம் முகவா்களுக்குக் கிடைக்கும். மேலும், ஐஆா்சிடிசி சுற்றுலா தொகுப்புகளை முகவா்கள் பகிா்ந்துகொள்ள முடியும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.